முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      வேலூர்

வேலூர் மாவட்டத்தில் திட்ட பணிகள் செயல்படுத்துவதில் அரசு துறைகளுக்கிடையே உள்ள நிலுவை இனங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்க 5-வது தளத்தில் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் நிலுவையில் உள்ள பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் 67 கிளை நூலகங்களில் 2 கிளை நூலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அதில் ஒன்றான சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 5 செண்ட் காலிமனையினை இலவசமாக ஒதுக்கீடு செய்ய கோரியதில் இராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலரிடம் தகுந்த இடத்தினை தேர்வு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. வேலூர் நெடுஞ்சாலை கோட்டத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் மாநில சாலையான சோளிங்கர்-காவேரிப்பாக்கம் சாலை இடை வழிப்பாதையை இருவழிப் பாதையாக அகலப்படுத்தி மேம்படுத்த நெடுஞ்சாலைத் துறை மூலம் வழங்கப்பட்டு இதுநாள் வரை பணிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கோட்டப் பொறியாளர் கோரியதற்கு இவ்வருடம் மே மாத இறுதிக்குள் பணிகள் நிறைவு செய்ய பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்தலுக்கான நிலுவைக் கட்டணம் உடனடியாக செலுத்த கோரியதில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் அனைத்து விளையாட்டு வசதிகளும் உள்ளடங்கிய வளாகம் அமைக்க ஊசூர் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு இடம் மற்றம் காப்பு காடு தேர்வு செய்யப்பட்டது. நிலமாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித் துறையின் கருத்திசைவினை வழங்கக் கோரியதில் கல்வித்துறை இசைவு பெறும்படி அறிவுறுத்தியும், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை வருவாய்த் துறைக்கான சொந்தமான நிலத்தினை தேர்வு செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் ஆம்பூர் நகராட்சியல் தேசிய நகர்ப்புற சுகாதார மைய திட்டத்தின் கீழ் ஆரம் சுகாதார நிலையம் அமைக்க ஆதி திராவிடர் மக்களுக்கான மனைப்பிரில் பொது உபயோக இடத்தை நிலக்கிரையமின்றி நில உரிமை மாற்றக் கோரியதில் ஆம்பூர் வட்டாட்சியரிடம் தகவல்களை பெறும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆம்பூர் நகராட்சியல் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணியில் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க இடங்களை ஒதுக்கித் தரக் கோரியதில் ஆம்பூர் நகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருக்கும் முட்செடிகளை அப்புறப்படுத்தி, பணிக்கு ஏதுவாக சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆம்பூர் நகராட்சி அம்ருத் திட்டம் 15-16 பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க இடங்களை நில உரிமை மாற்றக் கோரியதில் பஞ்சாயத்திடம் தீர்மானம் பெறும்படி அறுவுறுத்தப்பட்டது. மின் வாரியம் மூலம் பெங்களுர் சென்னை நெடுஞ்சாலையில் 90 மீ. பூமிக்கடியில் கேபிள் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினரிடம் அனுமதி கோரியதில் சந்தித்து பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மாநில கணக்காயரின் தணிக்கை தடை பத்திகளில் உள்ள நில அளவை கட்டம் நிலுவை கட்டணம் உடனடியாக செலுத்தக் கோரியதில் 1970-யிலிருந்து நிலுவையில் உள்ளதால் 1970 பணியாளர்களின் விவரம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், சார் கலெக்டர் மரு.கார்த்திகேயன், (திருப்பத்தூர்), வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்