152 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் : அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

புதன்கிழமை, 22 மார்ச் 2017      அரசியல்
admk head office(N)

சென்னை - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்காக, 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியலை, கட்சியின் பொதுச் செயலாளர் ஒப்புதலுடன் அ.தி.மு.க தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. வடசென்னை வடக்கு மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை, கழகப் பொதுச் செயலாளர் ஒப்புதலுடன் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கழக அவைத்தலைவரும், அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், கழகப் பொருளாளரும், அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., கழக தலைமை நிலையச் செயலாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி,

கழக செய்தித் தொடர்புக்குழு உறுப்பினர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ் மகன் உசேன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கழக அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான பி.தங்கமணி - கழக அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கழக மீனவர் பிரிவுச் செயலாளரும், அமைச்சருமான ஜெயக்குமார் மற்றும் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 152 பேர், கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, கழகப் பொதுச் செயலாளர் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளதாக, தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: