முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடி பல்கலைக்கழகத்தில் நீர் பாதுகாப்பு கருத்துரை மழை இல்லம் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் வழங்கினார்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

விஐடி பல்கலைக்கழகத்தில் நீர் பாதுகாப்பு கருத்துரை மழை இல்லம் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் வழங்கினார்.உலக நீர் தினத்தை யொட்டி விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நீர் பாதுகாப்பு வார நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள மழை இல்லம் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் பங்கேற்று மழை நீர் பாதுகாப்பில் உள்ள சவால்கள் பற்றி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். உலக நீர்தினத்தை முன்னிட்டு விஐடி பல்கலைக்கழகத்தில் மழை நீர் பாதுகாப்பு வாரம் சம்மந்தமான கருத்தரங்கம் 20ந் தேதி முதல் 24ந் தேதி வரை நடைபெறுகிறது. விஐடி கட்டிட மற்றும் இராசயன பொறியியல் பள்ளி இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது. அப்பள்ளியின் சுற்று சூழல் மற்றும் நீர் ஆதாரங்கள் பொறியியல் துறையின் சார்பில் விஐடி ராஜாஜி அரங்கில் மழை நீர் பாதுகாப்பில் உள்ள சவால்கள் என்ற கருத்தரங்கு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அந்த துறையின் தலைவர் முனைவர் எஸ்.சாந்தா குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் சென்னை மழை இல்லம் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் பங்கேற்று மழை நீர் பாதுகாப்பு சம்மந்தமாக பேசியதாவது: நிலத்தடி நீரின் அளவை பொறுத்தவரை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் எதிர்காலத்தில் நீருக்காக போராடும் நிலை ஏற்படும். இதிலிருந்து மீள வேண்டுமானால் மழை நீரை சேமித்து பாதுக்கப்பது அவசியம். மழை நீரின் சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அம்மாவட்டங்கள் பலத்த பாதிப்புக்கு உள்ளாகின. இதற்கு காரணம் ஏரிகள் குளங்கள் தூர்வாரி சீரமைக்கப்படாததால் மழை நீர் சேமிக்கப்படாமல் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டன. எனவே அம்மாவட்டங்கள் உட்பட நாட்டில் உள்ள அணைத்து ஏரி குளங்கள் மழை நீரை சேமிக்க தூர்வாரி சீரமைக்க வேண்டும். அடுத்ததாக நிலத்தடி நீர் மட்டம் உயர மழை நீர் சேகரிப்பு திட்டம் அவசியம். தமிழ்நாட்டில் 50 சதவித கட்டிடங்களில் தான் மழை நீர் சேகரிப்பு திட்டம் உள்ளது. எனவே எல்லா கட்டிடங்களிலும் இந்த திட்டம் அமைக்கப்பட வேண்டும். நகர்புறங்களிலும் கிராம புறங்களிலும் மழை நீர் சேமிப்பு திட்டம் சம்மந்தமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சேமிக்கப்படும் மழை நீரின் தன்மை மாறும் நிலை உள்ளது. அது மாறமலிருப்பதற்கான தொழில் நுட்ப வழிமுறைகள் அரசு வழங்க வேண்டும். ஆழ்துளை குழாய் கிணறுகளில் அடிமட்டத்தில் நீர் ஊற்று வருவதால் நிலத்தடி நீர் மட்டம் குறையும். ஆனால் கிணறுகளில் உள்ள மேல் ஊற்று மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனவே வீடுகளில் கிணறு அவசியமாக இருக்க வேண்டும். வீடுகளில் உள்ள கிணறுகளை மூடக்கூடாது என்று பேசினார். நிகழ்ச்சியில் விஐடி சுற்று சூழல் மற்றும் நீர் ஆதார பொறியியல் உதவி பேராசிரியர் முனைவர் பரிமளா ரெங்கநாயகி, விஐடி பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை மையத்தின் இணை பேராசிரியர் முனைவர் ரோஷன் கரன் ஸ்ரீ வட்ச்சவா ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்