முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு நிதி ஆதரவு தொகைக்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி வழங்கினார்கள்.

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் ஆகிய காவல்துறை அலுவலர்களுக்கு  ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   தலைமையில் நடைபெற்றது.

               இக்கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் சட்டத்திற்கு முரணான குழந்தைகளை கையாளுதல் குறித்தும் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்தும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை கோவை மாவட்ட நன்னடத்தை அலுவலர் வழங்கினார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய ஐந்து குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புதிட்ட வழிகாட்டி நெறிமுகைள் (ஐஊPளு ) - ன்படி அக்குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு ஒரு குழந்தைக்கு மாதம் 2000/- வீதம் ஐந்து குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.1,44,000/- (ஒரு லட்சத்து நாற்பத்தி நான்காயிரம்)  நிதி ஆதரவுத்தொகைக்கான காசோலையினைம் மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.

 

இந்நிழச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் , குழந்தைகள் நலக்குழு தலைவர், மாவட்ட நன்னடத்தை அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்