முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடுசெங்குந்தர் பொறியியல் கல்லூரியில்21வது ஆண்டுவிளையாட்டுவிழா

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      ஈரோடு

ஈரோடுசெங்குந்தர் பொறியியல் கல்லூரியில் 21வது ஆண்டுவிளையாட்டுவிழா நடைபெற்றது.இவ்விழாவில் பி. செந்தில்குமார்,சர்வதேசதடகளவீரர்,வணிகமேற்பார்வையாளர்,தெற்கு இரயில்வே,ஈரோடு,சிறப்புவிருந்தினராககலந்துகொண்டுவெற்றிப் பெற்றமாணவமாணவிகளுக்குபரிசுகளையும்,சான்றிதழ்களையும்,கேடயங்களையும் வழங்கிப் பேசுகையில்விளையாட்டில் சாதனைபுரியும் மாணவர்களுக்குவங்கிகள்,வருமானவரித்துறை,காப்பீடுமற்றும் பொதுத்துறைநிறுவனங்களில் ஏராளமானவேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும்  ஏராளமானஉதவித் தொகைகளும் சலுகைகளும் அரசால் வழங்கப்படுகின்றனஎன்று கூறினார்.

2016-17ம் கல்விஆண்டிற்கானசிறந்தவிளையாட்டுவீரருக்கானஆண்கள் பிரிவில்இறுதிஆண்டுமின்னணுமற்றும் தொடர்பியல் பொறியியல் துறையைசேர்ந்தசெல்வன் கௌசிக் ஜெயவேல்என்றமாணவரும்,பெண்கள் பிரிவில் இறுதிஆண்டுகட்டிடப் பொறியியல் துறையைசேர்ந்தசெல்வி ஏ. நந்தினிபிரியதர்ஷினிஎன்றமாணவியும் வெற்றிப் பெற்றனர். தனிநபர் சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில்சிறந்தவிளையாட்டுவீரராகஇயந்திரப் பொறியியல் துறைமுதலாம் ஆண்டுமாணவர் செல்வன் எஸ். சரண்,பெண்கள் பிரிவில் இரண்டாம் ஆண்டு,மின்னணுமற்றும் தொடர்பியல் பொறியியல் துறையைச் சேர்ந்தமாணவிகள் செல்விஎம். திவ்யபாரதிமற்றும் செல்வி ஜி.  குணலட்சுமிஆகியோர் வெற்றிப் பெற்றனர்.குழு விளையாட்டுக்களில் ஆண்கள் பிரிவில் இறுதிஆண்டுமாணவர்களும்,பெண்கள் பிரிவில் இரண்டாம் ஆண்டுமற்றும் இறுதிஆண்டுமாணவிகளும்,தடகளத்திற்கானஆண்கள் பிரிவில் மூன்றாம் ஆண்டுமாணவர்களும்,பெண்கள் பிரிவில் இரண்டாம் ஆண்டுமாணவிகளும, ஒட்டுமொத்தப் பிரிவில் ஆண்கள் அணியில் மூன்றாம் ஆண்டுமாணவர்களும, பெண்கள் பிரிவில் இரண்டாம் ஆண்டுமாணவிகளும் வெற்றிப் பெற்றனர்.

இவ்விழாவைகல்லூரியின் தலைவர் . ஜி. கமலமுருகன் தலைமைஏற்றார். செயலாளர் . எஸ். என். தங்கராஜீ,தாளாளர் . ஒய். எஸ். மதிவாணன்,பொருளாளர் எஸ். செந்தில்குமார்,ஆகியோர்வாழ்த்துரைவழங்கினர். துணைத் தலைவர் .ஏ. பி.வி. சாமிநாதன், இணைச் செயலாளர்  வி. தர்மலிங்கம் மற்றும் அறக்கட்டளைஉறுப்பினர் . எஸ்.ரவிஆகியோர்முன்னிலைவகித்தனர். முன்னதாககல்லூரியின் முதல்வர் முனைவர் வி. வெங்கடாச்சலம் அனைவரையும் வரவேற்று,வாழ்த்துரைவழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்