முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் : கலெக்டர் நிர்மல் ராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கொரடாச்சேரி , நீடாமங்கலம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து செய்தியாளர் பயணம் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

செய்தியாளர் பயணம்

 

 

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையப்பன் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 270 சதுர அடி பரப்பில் குமார் என்பவருக்கு கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து திட்டம் குறித்து பயனாளியின் கருத்தை கேட்டறிந்தார். பின்னர் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அம்மையப்பன் - ஆணைவடபாதி வரையில் ரூ.44 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் 2 கி.மீ தொலைவிற்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து இளங்குடி கிராமத்தில் ரூ.31 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாட்டுமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 97 பணியாளர்களை கொண்டு ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் குளம் வெட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குளம் வெட்டும் பணியில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயத்திற்கு வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 

அதனைத்தொடர்ந்து பருத்தியூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 2016-2017 நிதியாண்டில் 50 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 1 கறவை பசு ரூ.40 ஆயிரத்து 250 வீதம் மொத்தம் ரூ.20 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அசோலா மற்றும் பசுந்தீவணங்களை வழங்கினார். பின்னர் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அதங்குடி ஊராட்சியில் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் 2016-2017 ஆம் நிதியாண்டில் 408 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு வெள்ளாடு தலா ரூ.12 ஆயிரத்து 950 மதிப்பில் 4 வெள்ளாடுகள் வீதம் மொத்தம் ரூ.52 லட்சத்து 83 ஆயிரத்து 600 மதிப்பிலான வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். பயனாளியான சரஸ்வதி என்பவர் 2012 ஆம் ஆண்டு 4 வெள்ளாடுகள் வழங்கப்பட்டதாகவும், அந்த ஆடுகள் தற்போதுவரை 30 வெள்ளாட்டுக்குட்டிகள் ஈன்றுள்ளதாகவும் , வருவாய் கிடைப்பதாகவும் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாக்கோட்டை ஊராட்சியில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.48 ஆயிரத்து 850 மதிப்பில் வழங்கப்பட்டுள்ள நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணையினை பார்வையிட்டும், அசோலா பசுந்தீவணம் வளர்த்தல் பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

கலெக்டர் பேட்டி

 

 

அப்போது மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது....திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் இணைந்து செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இச்செய்தியாளர் பயணத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.83 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளையும்,கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ரூ.73 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளின் கருத்தையும் கேட்டறிந்துள்ளோம். தமிழகஅரசு செயல்படுத்தும் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது என பயனாளிகள் தெரிவித்தனர் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் ,, தெரிவித்தார்.

 

இச்செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன்,வருவாய் கோட்டாட்சியர் செல்வசுரபி, கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குநர் மரு.ரவீந்தரன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் செல்வராஜ், துணை இயக்குநர் மரு.முகமது உதுமான் , உதவி இயக்குநர்கள் மரு.ஈஸ்வரன்,மரு.ஹமீது அலி, உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் பத்திரிக்கையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்