முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியருகே 100 மலைவாழ் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான விதைகள் மற்றும் இடுபொருட்கள்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியருகே 100 மலைவாழ் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான விதைகள் மற்றும் இடுபொருட்களை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

                                     100 விவசாயிகள்

நீலகிரி மாவட்டம் திருச்சிக்கடி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் பழங்குடியின விவசாயிகளுக்கான விதை உற்பத்தி பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கலந்து கொண்டு 100 பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான விதைகள் மற்றும் இயற்கை விவசாயத்திற்கான இடுபொருட்களை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது-

                                         தொழில்நுட்ப பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை மையத்தில் 2011_2012 ஆம் ஆண்டு முதல் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் உள்ள அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் சார்பாக மலைவாழ் மக்கள் துணை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்ற பயிற்சியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான விதைகள், இடுபொருட்கள் மற்றும் பண்ணைக் கருவிகள் 100 மலைவாழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் அளிக்கப்படும் தொழில் நுட்ப பயிற்சிகள் மற்றும் வழங்கப்படும் விதைகள், இடுபொருட்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு மலைவாழ் விவசாயிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இம்முகாமில் பேராசிரியர் மற்றும் காய்கறி பயிர்கள் துறை தலைவர் முனைவர் டி.ஆறுமுகம், தோட்டக்கலை ஆராய்ச்சி மைய தலைவர் முனைவர் பீ. அனிதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் உமாராணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மலைவாழ் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்