முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் மின்கட்டணம் உயர்வு: பாரதிய ஜனதா எதிர்ப்பு

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா, பீகார் மாநிலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பிரேம் குமார் எழுந்து, மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மின்கட்டணத்தை நிதீஷ்குமார் அரசு உயர்த்தியுள்ளது. இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறினார். முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான இந்துஸ்தாணி அவாம் மோர்சா தலைவருமான ஜிதன் ராம் மஞ்ஹியும் மின்கட்டண உயர்வை வாபஸ் வாங்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மாநில மின்சாரத்துறை அமைச்சர் விஜேந்திர பிரசாத் யாதவ், அடுத்த நிதியாண்டில் இருந்து நுகர்வோர்களுக்கு மான்யத்தை நேரடியாக வழங்கப்படும் என்றார். நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வு எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் யாதவ் தெரிவித்தார்.

முன்னதாக ஒத்திவைப்பு தீர்மானத்தை பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவந்தனர். அதை ஏற்க சபாநாயகர் விஜய் குமார் செளத்ரி மறுத்துவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்