முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 20 பேரின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 20 பேரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் இரங்கல்

முதலமைச்சர் பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் உட்கடை மேலப்பட்டியைச் சேர்ந்த  காமாட்சி, திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம்; சிவகங்கை மாவட்டம், அ. காளாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த திரு குழந்தை மற்றும் சுரேஷ்; காஞ்சிபுரம் மாவட்டம், ஒலிமுகமதுபேட்டையைச் சேர்ந்த  அமுதா; திருநெல்வேலி மாவட்டம், உக்கிரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த  அருமைநாயகம்; ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த  பீட்டர் மற்றும் மதன்; தஞ்சாவூர் மாவட்டம், மேலதிருப்பூந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் கிஷோர்; தஞ்சாவூர் மாவட்டம், மேலக்களக்குடி கிராமத்தைச் சேர்ந்த  கருப்பையன், கோயம்புத்தூர் மாவட்டம், இடையர்பாளையத்தைச் சேர்ந்த  விஷ்ணுகுமார்; காஞ்சிபுரம் மாவட்டம், நீலாங்கரை கிராமத்தைச் சேர்ந்த  மணிகண்டன்; ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

துயரம்

மேலும், மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலைய பெண் காவலர்  ராதிகா; மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலைய முதல் நிலைக் காவலர்  அய்யங்காளை; மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  சௌந்திரபாண்டியன்; மதுரை மாவட்டம், கூடக்கோவில் காவல் நிலைய தலைமைக் காவலர்  சின்னசாமி; திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு தலைமைக் காவலர்  என்.கிருஷ்ணன்; ஆயுதப்படைப் பிரிவு காவலர்  க.கலைமணி மற்றும் அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு தலைமைக் காவலர்  எஸ்.வெங்கடாசலம்; அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் நிலைய தலைமை காவலர் க.முருகானந்தம் ஆகியோர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்தும் தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிதியுதவி

மின்சாரம் தாக்கியும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளிலும் உயிரிழந்த 20 நபர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்