முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 விமான நிறுவனங்களில் பயணிக்கத் தடை : சிவசேனா எம்.பி.மீது வழக்கு பதிவு

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

 மும்பை  - ஏர் இந்தியா ஊழியரை காலணியால் தாக்கியச் சம்பவத்தையடுத்து விமான நிறுவனங்கள் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாடுக்கு தடை விதிக்க, அவர் ரயிலில் பயணம் செய்தார். அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவர், ஹஸ்ரத் நிஜமுதின் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு ஆகஸ்ட் கிரந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணம் செய்தார். ஏ-1 ஏ/சி 2 டயர் பெர்த் டிக்கெட்டில் அவர் பயணம் செய்தார். அவருடன் வந்தவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் மதுரா ரயில் நிலையத்தில் மருத்துவர் அவருக்குச் சிகிச்சை அளித்தார்.
காலணியால் 25 முறை  தாக்குதல்

 புனேயிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த ரவீந்திர கெய்க்வாட் இகானமி கிளாஸ் மட்டுமே உள்ளதை அறியாமல் பிசினஸ் கிளாஸ் கேட்டு தகராறு செய்தார், இதனையடுத்து ஏர் இந்தியா உதவி மேலாளரான 62 வயது ஆர்.சுகுமாரை அவர் தன் காலணியால் 25 முறை அடித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனமும் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் மற்றும் கோ ஏர் நிறுவனங்களும் கெய்க்வாட் விமானப் பயணம் செய்ய தடை விதித்தது.

வழக்கு பதிவு
மேலும் ஏர் ஆசியா, விஸ்தாரா ஆகிய விமான சேவை நிறுவனங்களும் கூட கெய்க்வாடுக்கு எதிரான தடை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் நேற்று ரவீந்திர கெய்க்வாட் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்