முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - உத்தரப் பிரதேசத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் சீன் ஸ்பைசர் கூறியபோது, "உத்தரப் பிரதேசத்தில் இந்திய பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வெற்றி பெற்றதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். மேலும் டிரம்ப் - மோடி இடையிலான உரையாடல் பின்னால் விவரமாக வெளியிடப்படும்" என்றார். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு மோடியுடன் தொலைபேசி வாயிலாக நடத்தும் மூன்றாவது உரையாடல் இதுவாகும். முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜக 312 தொகுதிகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்