முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29 மாநிலங்களில் 11 மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையிலும் 272 -மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்தது தமிழக விவசாயிகள் தான் : வேளாண் பல்கலை. துணை வேந்தர் கு.ராமசாமி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராட்சி நிலையத்தில், மாவட்ட அளவிலான மா சாகுபடி கருத்தரங்கம் நேற்று ( 28.03.2017) நடைபெற்றது. இக்கருத்தரங்கை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கு.ராமசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கலெக்டர் சி.கதிரவன் முன்னிலை வகித்தார். முன்னதாக மா சாகுபடி தொழிற்நுட்பம் குறித்து, பையூர் மண்டல ஆராட்சி குறிப்புகளான கொள்ளு விதை தற்போதிய நிலை, ஆண்டு அறிக்கை ஆர்.ஆர்.எஸ்.பையூர் குறித்தும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சன் அக்ரோ உயிர் தொழிற்நுட்ப ஆராட்சி மையம் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகளின் முக்கிய கண்டு பிடிப்புகள் குறித்தும் நூல்கள் வெளியிடப்பட்டது. இந்நூல்கள் கலெக்டர் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பெற்றுகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மண்டல ஆராட்சி நிலையம் பையூர் ( பேராசிரியர் மற்றும் தலைவர்) சை.முகமது ஜலாலுதீன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் உரையாற்றும் போது :சொட்டு நீர் பாசனம் முதல்முறையாக கொண்டு வரப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான். அனைத்து விவசாயிகளுக்கும் சொட்டு நீர் பாசனம் கிடைக்க வேண்டும். அதற்காக முயற்சிகள் தமிழ்நாடு பல்கலைக்கழகம் எடுத்து வருகிறது. மா விவசாயிகள் உயர் தொழிற் நுட்ப முறையினை கையாள வேண்டும். அப்பொழுது தான் வேளாண் உற்பத்தியில் விளைச்சல் அதிகரிக்க செய்ய முடியும். குறிப்பாக உரம் இடுவதற்க்கு முன்பு 12.50 டன் தொழு உரம் இட்டு பின்பு உரத்தை போடவேண்டும். அப்பொழுது தான் சாகுபடி உற்பத்தி அதிகரிக்கும். அதேப்போல இடுப்பொருட்களை தவிர்த்து இயற்க்கை தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 11 மாநிலங்களில் வறட்சி பாதிக்கபட்டுள்ள நிலையிலும் 272 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து காட்டியவர்கள் விவசாயிகள் தான். ஆகவே விவசாயிகள் கஷ்டங்களை குறைக்கும் வகையில் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் மத்திய மாநில அரசு 100 கோடி ரூபாய் நிதியினை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒதுக்கி உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யக் கூடிய காய்கறி பழங்கள் நஞ்சு இல்லாமல் நுகர்வோருக்கு வழங்குவதற்காக அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். அதேப்போல் மா கூழ் உற்பத்தி விலைக்கூட்டு பொருளாக மாற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் நலனுக்காக மாநில வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவி இல்லாமல் தமிழக அரசு சுமார் ரூ. 800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 350 கோடி சொட்டு நீர் பாசனத்திற்கு பயன்படு;த்தப்படவுள்ளது. வரும்காலத்தில் நிள ஆவணங்களை ஆதார் எண்ணுடன்; இணைத்து கொள்ள வேண்டும். இதனால் விவசாயிகள் அரசு வழங்கக்கூடிய 100 சதவிகிதம் சிறு குறு விவசாயிகளுக்கும் , 80 சதவிகிதம் பெரு விவசாயிகளுக்கும் சொட்டு நீர் பாசனம் மானியம் விலையில் கிடைக்கும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கு.ராமசாமி உரையாற்றினார். நிகழ்ச்சியில் 6 மா விவசாயிகளுக்கு பழ ஈ பொரிகளை கலெக்டர் சி.கதிரவன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கு. ராமசாமி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் போது சன் அக்ரோ பையோ டெக் முனைவர் எஸ்.சித்தானந்தன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சீனிவாசன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சங்கரன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பயிர் பாதுகாப்பு இயக்குநர் முனைவர் கே.ராமராசு, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக ஆராட்சி இயக்குநர் முனைவர் . மா. மகேஷ்வரன், மண்டல ஆராட்சி நிலைய பேராசிரியர் முனைவர். மு.ஆனந்தன், உதவி பேராசிரியர் ( தோட்டக்கலைத் துறை ) முனைவர் அ.புனிதா, உதவி பேராசிரியர் (உளவியல் ) சிவகுமார், உதவி பேராசிரியர் (நுட்புழுவியல்) செந்தில் குமார், உதவி பேராசிரியர் (விதை அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறை) பா.ஸ்ரீமதி விவசாயிகள் ராமகவுண்டர், செந்தில் சண்முகம், வெங்கடேசன், மாதவன், கோவிந்தராஜ் மற்றும் விவசாய சங்க பிரதிநிகள் , விவசாய பெருமக்கள் , பையூர் மண்டல ஆராட்சி நிலைய பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்