முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தேனி
Image Unavailable

தேனி ஆர்.சி உயர்நிலைப்பள்ளியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சி;த்தலைவர் ந.வெங்கடாசலம்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு மது, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மூலமாக போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டவாறும் நடைபெற்றது. மேலும், ஒரு வார காலத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இப்பேரணியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன்  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.பத்மாவதி  உதவி ஆணையர் (கலால்) கார்த்திகேயன்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்  வட்டாட்சியர் (கலால்) குணசேகரன்  தேனி வட்டாட்சியர் ஷேக்அயூப்  துணை காவல் கண்காணிப்பாளர் சேது  மருத்துவர் மரு.ஜெயசந்திரன்  செஞ்சிலுவை சங்கத்தைச் சார்ந்தவர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்