முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தீர்மானம்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

சங்கரன்கோவில் இரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நெல்லை வடக்கு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வினுப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மகேந்திரகுமார், கொள்கை பரப்பு செயலாளர் விஜயராஜ், இளைஞரணி செயலாளர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் மாடசாமி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன், துணை பொதுச்செயலாளர் இமான்சேகர், கொள்கை பரப்பு செயலாளர் நெல்லையப்பன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் பேசியதாவது:-தமிழ் நாட்டில் வறட்சி பாதிப்பு உள்ள நிலையில் மத்திய, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது மத்திய அரசு வழங்கி உள்ள நிவாரணம் ஒரு மாவட்டத்திற்கு கூட வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுவதுமாக ரத்து செய்யவேண்டும். தாமிரபரணி ஆற்றில் அன்னிய குளிர்பானங்கள் நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். பொதுமக்களின் போராடத்திற்கு மதிப்பு அளித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளும் அரசியல் சார்பு இல்லாமல் ஆதரவு அளிக்க வேண்டும். ஐநா சபையில் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து இலங்கை அரசுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதை கண்டிக்கிறோம். இதில் மவுனம் காத்த மத்திய அரசையும் கண்டிக்கிறோம். இவ்வாறு ஜான் பாண்டியன் பேசினார். சங்கரன்கோவில் பஸ்நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும், அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்களை நியமனம் செய்யவேண்டும், தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை மத்தியஅரசு உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் வடக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் சந்தனமாரியப்பன் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்