தி.மலை ஆட்சியரகத்தில் ஆன்லைன் சேவை பொது சேவை மைய பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      திருவண்ணாமலை
photo05

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று ணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் குடும்ப அட்டைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுவது குறித்த பொது சேவை மைய பணியாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள் உடன் இருந்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் 134 பொது விநியோக கடைகளில் 73883 குடும்ப அட்டைகள் மூலம் 275503 நபர்களும், செங்கம் வட்டத்தில் 175 பொது விநியோக கடைகளில் 80636 குடும்ப அட்டைகள் மூலம் 294096 நபர்களும், சேத்துப்பட்டு வட்டத்தில் 107 பொது விநியோக கடைகளில் 43109 குடும்ப அட்டைகள் மூலம் 140874 நபர்களும், செய்யார் வட்டத்தில் 166 பொது விநியோக கடைகளில் 62364 குடும்ப அட்டைகள் மூலம் 193037 நபர்களும், கலசபாக்கம் வட்டத்தில் 99 பொது விநியோக கடைகளில் 41160 குடும்ப அட்டைகள் மூலம் 135458 நபர்களும், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் 117 பொது விநியோக கடைகளில் 51028 குடும்ப அட்டைகள் மூலம் 160719 நபர்களும், போளுர் வட்டத்தில் 155 பொது விநியோக கடைகளில் 72172 குடும்ப அட்டைகள் மூலம் 253202 நபர்களும், தண்டராம்பட்டு வட்டத்தில் 113 பொது விநியோக கடைகளில் 53685 குடும்ப அட்டைகள் மூலம் 203752 நபர்களும், திருவண்ணாமலை வட்டத்தில் 225 பொது விநியோக கடைகளில் 115459 குடும்ப அட்டைகள் மூலம் 396259 நபர்களும், வந்தவாசி வட்டத்தில் 230 பொது விநியோக கடைகளில் 79505 குடும்ப அட்டைகள் மூலம் 226888 நபர்களும், வெம்பாக்கம் வட்டத்தில் 106 பொது விநியோக கடைகளில் 37696 குடும்ப அட்டைகள் மூலம் 113948 நபர்களும், என மொத்தம் 1627 பொது விநியோக கடைகளில் 710697 குடும்ப அட்டைகள் மூலம் 2393736 நபர்கள் உள்ளனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைதளம் மூலம் குடும்ப அட்டைகள் பெறுவதற்கு உறுப்பினர் சேர்க்கை, முகவரி மாற்றம், அட்டை ஒப்படைத்தல் ஃ இரத்து, அட்டை வகை மாற்றம், குடும்ப அட்டை முடக்கம், குடும்பத் தலைவர் உறுப்பினர் மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம் ஆகிய ஆன்லைன் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைக்காக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் உடன், பொது மக்கள் பயன்பாட்டிற்கான மேற்கண்ட இணையதளம் மூலம் இச்சேவைகளை தாங்களாகவே இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த ஆன்லைன் இணையதள வேவை குறித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களின் பணியாளர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.முன்னதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொது விநியோக திட்டத்தின் ஆன்லைன் இணையதள வேவை குறித்து பொது மக்களுக்கு விளக்கிடும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள பொது விநியோக கடைகளில் வைக்கப்படவுள்ள சுவரொட்டிகளை பார்வையிட்டார்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: