முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் : கலெக்டர் நந்தகுமார் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்ட உற்பத்திக் குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் க. நந்தகுமார். தலைமையில் நேற்று (31.03.17) மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

 

பயிர் சாகுபடி

 

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ ஆகும். சென்ற ஆண்டு 510.74 மி.மீ மழை பெய்துள்ளது. பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை நெல் 3,350 எக்டரும், கடந்த ஆண்டு 14,089 எக்டரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்களை பொறுத்தவரை இந்த ஆண்டு 50,878 எக்டரும், கடந்த ஆண்டு 58,851 எக்டரும,; பயறு வகைகளை பொறுத்தவரை இந்த ஆண்டு 1,282 எக்டரும், கடந்த ஆண்டு 1,653 எக்டரும், எண்ணெய் வித்துக்களை பொறுத்தவரை இந்த ஆண்டு 1425 எக்டரும், கடந்த ஆண்டு 3605 எக்டரும், பருத்தியை பொறுத்தவரை இந்த ஆண்டு 20,996 எக்டரும், சென்ற ஆண்டு 20,383 எக்டரும், கரும்பை பொறுத்தவரை இந்த ஆண்டு 5,014 எக்டரும், கடந்த ஆண்டு 8,132 எக்டரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், விதை கொள்முதலை பொறுத்தவரை 212.8 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 212.72 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் இராகி 0.425 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை 13.552 மெட்ரிக் டன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உரங்களை பொறுத்தவரை கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் யூரியா இருப்பு 1,360 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி இருப்பு 685 மெட்ரிக் டன்னும், எம்.ஒ.பி இருப்பு 1,220 மெட்ரிக் டன்னும், கலப்பு உரம் இருப்பு 2,265 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது என்ற விபரமும் அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தனர். குறிப்பாக குடிநீர்த்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கரும்புக்கான நிலுவைத்தொகைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்கு மேலும் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விவசாயிகளுக்கு உரிய விளக்கங்களை அளிக்க அறிவுறுத்தினார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட் துறை அலுவலர்களும், வேளாண்மையில் முன்னேற்றம் கண்ட விவசாயிகள் தங்களது அனுபவங்களையும் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவாக எடுத்துரைத்தார்.

முன்னதாக வேளாண்த்துறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் - நெல் இயக்கத்தின் சார்பில் 9 நபர்களுக்கு ரூ.14,82,750 மதிப்பிலான பவர் டிரில்லர்களை ரூ.6,75,000 மதிப்பிலான அரசு மானிய உதவியுடனும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ரூ.5,48,437 மதிப்பிலான டிராக்டர் ரூ.1,00,000 மதிப்பிலான மானிய உதவியுடனும், ரூ.55,000 அரசு மானிய உதவியுடன் கூடிய ரூ.1,14,000 மதிப்பிலான ரொட்டவோட்டர் என மொத்தம் ரூ.21,44,037 மதிப்பிலான வேளாண்கருவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) எம். ராஜகோபால், பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மாரிமுத்து, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராஜாமணி, கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குநர் செங்கோட்டையன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்