முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகனத்தை விட்டு இறங்காமல் தீபா பிரச்சாரம் : போக்குவரத்து பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை  - ஆர்.கே.நகர் தொகுதியில், வாகனத்தை விட்டு இறங்காமல்  தீபா பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.  ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா, தண்டையார்பேட்டையில்  பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது தீபா காருக்குள்ளேயே இருந்ததால், அங்கு கூடியிருந்த பெண்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. சிறிது நேரத்துக்கு பிறகு காரிலிருந்து தீபா இறங்கியதும் ஆதரவாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்களால், தீபாவைப் பார்க்க முடியவில்லை.

மீண்டும் காரில் ஏறிக்கொண்ட தீபா, தண்டையார்பேட்டை நேரு நகருக்கு சென்றார். அங்கும் காருக்குள் அமர்ந்து பிரச்சாரம் செய்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு, தீபாவுக்காக தயார் செய்யப்பட்ட பிரச்சார வாகனம் அங்கு வந்தது. காரிலிருந்து வெளியில் வந்த தீபா, சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று நாவலர் நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வாக்கு சேகரித்தார்.

ஒரு வார்த்தை கூட பேசாத தீபா
அப்போது பல பெண்கள் தீபாவை நெருங்கி வந்து, ‘ஜெயலலிதா வருவது போன்றே இருக்கிறது’ என்றனர். அவர்களிடம் ஒரு வார்த்தைகூட பேசாத தீபா, புன்னகையுடன் கையெடுத்து வணங்கியவாறு சென்றார். அவர் தங்களிடம் பேசாதது குறித்து பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். பின்னர் நேதாஜி நகரின் பல்வேறு தெருக்களுக்கு பிரச்சார வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். வாகனத்தில் இருந்து இறங்காமல் தீபா வாக்கு சேகரித்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. தீபாவின் பிரச்சாரத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த சாலையைக் கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகே நிலைமை சீரானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago