எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நாடக விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு கலை நிகழ்ச்சியினை கண்டுகளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: அறம் என்று சொல்லும்போது, நாம் தப்பாக வேற எந்த அறத்தையும் நினைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், இந்த காலத்திலும் அறம் அறம் என்று சொல்லி நம்மை நிறைய மண்டையை கழுவிக் கொண்டே இருந்தாங்க. அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, அறம் என்று சொல்லுவது மனிதநேயம்.
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், காரல் மார்க்ஸும் சொன்னதுதான் ‘அறம்’. மனிதனை நேசிக்கக் கூடியதுதான் அறம். ஒரு பெண்ணுக்கு அழகான வசனமாக, இந்த நாடகத்தின் இறுதிக் கட்டத்தில் மணிமேகலை சொல்வது போல; “என்னுடைய வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்ளக்கூடிய உரிமை எனக்கு இல்லை” என்று நீ எப்படி சொல்ல முடியும்?. இன்றைக்கு அந்த உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிறது என்று நாம் புரிந்து கொண்டோம் என்றால் நிச்சயமாக இந்த சமூகத்தில் ஆணவக் கொலைகள் என்பது இருக்கவே இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


