எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிச.26) கவுரவித்தார்.
சிறார்களுக்கு...
கலை மற்றும் கலாசாரம், வீரம், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவைகள், விளையாட்டு, சுற்றுப்புறச் சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சாதனை புரிந்த 5 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு ஆண்டுதோறும் வீர பால திவஸ் (டிச. 26) நாளில் பால புரஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருதை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 20 சிறார்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் உள்ள விக்யான் பவனில் நேற்ரு காலை வழங்கி கவுரவித்தார்.
20 பேர் தேர்வு...
நிகழாண்டு 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 20 பேர் இந்த விருதுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், ஆவணத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார். இந்திய அணியின் இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பால புரஸ்கார் விருது வழங்கி கவுரவித்தார்.
சதம் விளாசி...
பீகாரைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூரியவன்ஷி கடந்தாண்டு நடந்த மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனது அதிரடி பேட்டிங்கால் வியக்கவைத்த சூரியவன்ஷி, 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக்கோப்பை, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர், இளம்வீரர்களுக்கான ஒருநாள், இளம்வீரர்களுக்கான டெஸ்ட், இந்தியா ஏ என அனைத்துப் போட்டிகளிலும் சதம் விளாசி அசத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரிலும் 84 பந்துகளில் 190 ரன்கள் விளாசி வியக்கவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


