முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்ட 2017 உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பிரபாகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2017 உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியலை வெளியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

          இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  அவர்கள் தெரிவித்ததாவது,

          ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மொத்த வாக்குச்சாவடிகளான 2688 வாக்குச்சாவடிகளின் பட்டியல் மற்றும் அமைவிடம் குறித்து, வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் 2017-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு ஊரகம் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 2706 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது.

          14 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கியுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 1540 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 642 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி ஆகிய நகராட்சிகளில் 134 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 390 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2016 உள்ளாட்சித் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கும் கூடுதலாக 20 வாக்குச்சாவடிகள் 2017 உள்ளாட்சித் தேர்தலுக்கு அமைக்கப்பட உள்ளது. பேரூராட்சிகளை பொருத்த வரையில் பெருந்துறை பேருராட்சியில் வாக்காளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் வாக்குச்சாவடிகளை அமைப்பதால் 2017 உள்ளாட்சித் தேர்தலுக்கு சென்ற தேர்தலைவிட 2 வாக்குச்சாவடிகள் குறைவாக அமைக்கப்பட உள்ளது. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்புடைய நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

                இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல் கான்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந.சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சோ.உமாசங்கர், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்