முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கு.

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் புதன்கிழமை சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம், சிறப்பு அலுவலர் டி.பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் திருவண்ணாமலை மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக உதவி பொறியாளர் எஸ்.கோபி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி பேசியது, தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் மற்றும் கூட்டுமின்திட்டம் குறித்து விவரமாக எடுத்துரைத்தார். 110 கேவி துணை மின் நிலையத்தின் கட்டமைப்பு மற்றும் முக்கியமான உபகரணங்கள் செயல்படும் விதம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி பேசினார். பேராசிரியர்கள் டி.இளங்கோ, கே.பாரதி மற்றும் மின்னியல் பொறியியல் தொழில்நுட்பக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்