முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      திருவள்ளூர்
Image Unavailable

 

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

 

கூட்டத்தில் கலெக்டர் எ.சுந்தரவல்லி பேசியதாவது திருவள்ளுர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்காக 3,241 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 128 ஆண் வாக்குச் சாவடிகள், 128 பெண் வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்காளர்களுக்கும் 2,289 வாக்குச் சாவடிகள் என 2545 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

132 வாக்குச் சாவடிகள்

 

மேலும் 5 நகராட்சிகளுக்கு 103 ஆண் வாக்குச் சாவடிகளும், 103 பெண் வாக்குச் சாவடிகளும், அனைத்து வாக்களர்களுக்கும் பொதுவாக 282 வாக்குச் சாவடிகள் என 488 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 10 பேரூராட்சிகளுக்கு 38 ஆண் வாக்குச் சாவடிகள், 38 பெண் வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்களர்களுக்கும் பொதுவாக 132 வாக்குச் சாவடிகள் என 208 வாக்குச் சாவடிகளும், மொத்தமாக 2545 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

 

இதுகுறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான அலுவலகங்களில் மார்ச் 31-ம் தேதி முதல் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்;து. வாக்குச் சாவடிகளின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்பேரில் கருத்துரையின் அடிப்படையில் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி வாக்குச் சாவடிகளின் செய்யப்பட்ட இடமாற்றம், பெயர் மாற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.

 

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் வெங்கடேசன்,அம்பேத்ஆனந்த்,கஜேந்திரன்,அனைத்து நகராட்சி ஆணையர்கள் செந்தில்குமரன்(திருவள்ளுர்),சித்ரா(பூந்தமல்லி),முஜிபர்ரஹ்மான்(ஆவடி),கிருஷ்ணமூர்த்தி(திருவேற்காடு),முருகேசன்(திருத்தணி) மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்