கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மகளிர் கலைகல்லூரி முப்பெரும் விழாவில் பல்கலைக்கழக கல்வி சார் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவியர்கள்: கலெக்டர் சி.கதிரவன் பரிசுகளை வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
2

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைகல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டுவிழா மற்றும் பேரவை நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று (07.04.2017) நடைபெற்றது. இவ்விழாவில் இணை பேராசிரியர் தமிழ் துறை தலைவர் முனைவர் சௌ.கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். தேவராஜ் புருட்ஸ் நிறுவன தலைவர் மதியழகன் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ச.நளினி அவர்கள் தலையுரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார்கள். வேதியியல் துறை தலைவர் மற்றும் விளையாட்டு துறை பொறுப்பாசிரியர் சு.வள்ளி சித்ரா அவர்கள் விளையாட்டு அறிக்கை வாசித்தார்கள். பின்பு கலெக்டர் அவர்கள் மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி தலைமையுரையில் பேசியதாவது:கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் பேரவை நிறைவு விழா காணும் கல்லுரி மாணவியர்கள் மற்றும் முதல்வர், பேராசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மூன்றாண்டு நிறைவு பெறும் மாணவியர்கள் அனைவரும் பல்வேறு வகையான போட்டி தேர்வில் வெற்றி பெற்று நல்ல நிலையை அடைய வேண்டும். சமுதாயத்தில் கல்லூரியில் மட்டும் தான் நல்ல நண்பர்கள் கிடைக்ககூடிய இடமாக திகழ்கிறது. ஆகவே மாணவியர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். சுற்று சுழலை காக்கவும், சமூக சேவைகளை ஆற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் இக்கல்லூரி மாணவியர்கள் என்.எஸ்.எஸ். முகாமின் போது சேவை நோக்கோடு சீமை கருவேல் அகற்றும் பணியில் ஈடுபட்டு அவற்றை அகற்றி கொடுத்தார்கள். அதற்காக மாணவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கலெக்டர் சி.கதிரவன் இ.ஆ.ப. அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்வி சார் போட்டியில், விளையாட்டு போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதல்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக விளையாட்டு துறை செயலர் செல்வி செ.ஆனந்தஷைனி அவர்கள் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், விரைவுரையாளர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: