முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் திருகல்யாணம் வைபவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      சேலம்

சேலம் அருள் மிகு காவடி பழனியாண்டவர் திருக்கோயிலில் பங்குனி உத்தர தேர் வைபவத்தை முன்னிட்டு முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது. ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து மாங்கல்ய பிரசாதம் பெற்றுச்சென்றனர்.தமிழ் கடவுளாம் முருகபெருமானுக்கு பங்குனி மாதத்தில் உத்தர தேர் வைபவம் நடைபெறுவது வழக்கம், தமிழகம் முழுவதும் முருகன் திருக்கோயிலில் பங்குனி உத்திரம் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெறும், அதே போல சேலம் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள காவடி பழனியாண்டவர் திருக்கோயிலில் ஐம்பத்தி ஆறாம் ஆண்டு பங்குனி உதிரம் வைபவம் கடந்த வாரம் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பல்வேறு சிறப்பு பூஜைகளும், வைபவங்களும் நடைபெற்று வருகிறது., பத்து நாட்கள் நடைபெறும் இந்த பங்குனி உத்திர வைபவத்தில் ஆறாம் நாள் முக்கிய நிகழ்ச்சியான முருகன் திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. அதிகாலை முதல் கோமாதா பூஜை, சுப்ரபாதம்,என பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது. பின்னர் முருகனுக்கும் வள்ளி தெய்வானை தாயாருக்கும் பால், இளநீர், பன்னீர், சந்தனம், என அறுபத்திநான்கு வகையான பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தியான முருகன், வள்ளி, தெய்வானை தாயாருக்கு பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் முன் எழுந்தருள செய்தனர். இதனை தொடர்ந்து சோமசுந்தர குருக்கள் தலைமையில் வேத விற்பனர்கள் கலந்துகொண்டு வேதங்கள் முழங்க யாக பூஜை நடைபெற்றது. பின்னர் பூர்ணா உதி முடிவடைந்தவுடன், மாங்கல்ய கயிற்றை பக்தர்கள் முன் காண்பித்து மேளதாளம் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதனை தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இது குறித்து தலைமை குரு சோமசுந்தரம் கூறும்போது பங்குனி உத்திர வைபவம் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வருகிறது வைபவத்தின் முக்கிய நாளான நேற்று நாளில் முருகனுக்கும் வள்ளி தெய்வானை தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த வைப்பதில் கலந்துகொண்டால் வாழ்வில் வளம் பெறலாம் என்றும் உலக அமைதிக்காவும், மழை வேண்டியும், திருமணம் ஆகாதவர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம் என்றும் திருக்கல்யாணம் வைபவத்தில் கலந்து கொண்ட அணைத்து பக்தர்களுக்கும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்படும் எனவும தெரிவித்தார். இந்த வைபவத்தை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வள்ளி தெய்வானை சமேதராய் காட்சி அளிக்கும் முருகனை வழிபட்டனர் மேலும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மாங்கல்ய பிரசாதம் பெற்றுச்சென்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்