தேன்கனிக்கோட்டை, மற்றும் கெலமங்கலம் பேரூராட்சிகளில் குடிநீர்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
1

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, மற்றும் கெலமங்கலம் பேரூராட்சிகளில் குடிநீர்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் சி.கதிரவன் நேற்று ( 08.04.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அவர்கள் ஓகேனக்கல் குடிநீர் திட்டம் 6 - வார்டுகளுக்கு ஓகேனக்கல் குடிநீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் 12 - மற்றும் 13 - வார்டுகளுக்கு ஓகேனக்கல் குடிநீர் மற்றும் உள்ளுர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வறட்சி காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக மாற்று ஏற்பாடுகள் மூலமாக அனைத்து வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் சீராக வழங்குவது குறித்தும் புதிய பைப் லைன் அமைத்து இணைப்பது குறித்து சம்மந்தப்பட்ட பொறியாளர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கலெக்டர் அவர்கள் உத்திரவிட்டார்.தொடர்ந்து கெலமங்கலம் பேரூராட்சியில் உள்ளுர் குடிநீர் திட்டத்தின் கீழ் ராயக்கோட்டை சாலையில் 3,4,5 வார்டுகளுக்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டு இதன் மூலமாக குடிநீர் வினியோம் செய்ய அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். கெலமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் உர திடல் வளாக பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த உர திடல் ரூ. 62.50 லட்சம் மதிப்பில் அமைக்கவுள்ள வின்ட்ரோ பிளாட்பாரம் இருப்பு அறை மற்றும் 550 மீட்டர் சுற்று சுவர் பணிகளை விரைந்து முடித்து குப்பைகளை உரமாக்கும் பணிகளையும், மண்புழு உரம் தயாரித்தல் பணிகளையும், மேற்கொள்ள கலெக்டர் சி.கதிரவன் பேரூராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இவ்வாய்வின் போது பேரூராட்சி செயற்பொறியாளர் நடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன், உதவி பொறியாளர் ராஜேந்திரன், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் மு.சேகர், வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: