முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தலைமை நீரேற்று நிலையத்தினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சென்னிமலை பேரூராட்சிகள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தலைமை நீரேற்று நிலையத்தினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்  ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட குடிநீரின் அளவான 11 மில்லியன் இலட்சம் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். குளோரின் அளவினையும் பரிசோதனை செய்தார்கள். கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ள தலைமையிடமான காவேரி ஆற்றுப்படுகை கோணவாய்க்கால் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து குடிநீரினை பொதுமக்களுக்கு சீராக வழங்கிடுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுக்கு  அறிவுரை வழங்கினார்கள்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் லலிதா, உதவிப்பொறியாளர் புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்