சொந்த மக்களை கேவலமாக பேசமாட்டேன் : சிதம்பரத்துக்கு தருண் விஜய் பதில்

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      அரசியல்
Tarun Vijay 2016 11 6

 புதுடெல்லி - நான் செத்தாலும் சாவேனே தவிர எனது சொந்த மக்களை அசிங்கமாக பேச மாட்டேன் என பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார். கென்ய நாட்டை சேர்ந்த இளைஞர் இந்தியாவில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளித்த பேட்டியொன்றில், இந்தியர்கள் நிறவெறி கொண்டவர்கள் கிடையாது. இத்தாக்குதல் அதற்காக நடந்திருக்காது என தருண் விஜய் விளக்கம் அளித்தார்.அப்போது இந்தியாவில் பல்வேறு நிறம் கொண்ட மக்கள் வாழ்கிறோம். தென் இந்தியாவில் கறுப்பு நிறம் அதிகம். அதற்காக நாங்கள் விரோதம் பாராட்டவில்லையே என்று தனது பேச்சுக்கு நியாயம் சேர்த்தார்

தென் இந்தியர்கள் கண்டனம்
ஆனால் இவ்வாறு பேசியது தென் இந்தியர்களை கறுப்பினத்ததவர்களோடு ஒப்பிடுவதை போல உள்ளது என்று தென் இந்தியாவை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கேவலப்படுத்த மாட்டேன்
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தருண் விஜய், நான் செத்தாலும் சாவேனே தவிர, எனது நாட்டின் சொந்த கலாசாரம், சொந்த மக்களையும், சொந்த நாட்டையும் பற்றி குறைவாக பேச மாட்டேன். எனது பேச்சை தப்பாக சித்தரிக்கும் முன்பாக கொஞ்சம் யோசியுங்கள். எனது பேச்சு புண்படுத்திவிட்டதாக நினைப்பவர்களுக்கு எனது மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இனவெறிக்கு எதிராக போராடியுள்ளோம், எங்களிடம் பல்வேறு கலாசாரம், வண்ணம் கொண்ட மக்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவில் இனவெறி என்பது கிடையாது. எல்லோரும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்றுதான் நான் பேட்டியில் தெரிவித்தேன். இவ்வாறு தருண் விஜய் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: