முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு

புதன்கிழமை, 4 பெப்ரவரி 2026      தமிழகம்
gold 2025-01-03

சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,20,000-க்கும் விற்பனையானது.

சிறிய ஆறுதலுக்குப் பின்னர் பழையபடி ஏறுமுகத்தில் உயர்ந்து வருகிறது தங்கம், வெள்ளி விலை. நேற்று முன்தினம் (பிப்.3) வர்த்தக முடிவின்போது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,560 உயர்ந்து அதிர்ச்சி தந்த தங்கம் விலை, நேற்று (பிப்.4) காலையிலேயே பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து விற்பனையானது.

சர்வதேச பொருளாதாரச்சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜன.30, 31 தேதிகளிலும், பிப்.2-ம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களை ஆசுவாசப்படுத்தியது. மூன்று நாட்களில் பவுனுக்கு ரூ.22,800 வரை குறைந்தது. புவி அரசியலில் மாற்றம், ஃபெடரல் வங்கித் தலைவரை ட்ரம்ப் தேர்வு செய்தது, முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று லாபம் பார்த்தது எனப் பல காரணங்கள் அதன் பின்னணியில் இருந்தன.

இந்த விலை குறைப்பு நீடிக்காதா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை மொத்தமாக பவுனுக்கு ரூ.2,560 அதிகரித்தது. இந்நிலையில், நேற்று (பிப்.4) காலை, தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று முன்தினம் மதியம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,20,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து