முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களை குழந்தை தொழிலாளர்களாக சட்டம் வரையரை செய்துள்ளது: கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே தகவல்

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை

இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களை குழந்தை தொழிலாளர்கள் என சட்டம் வரையரை செய்துள்ளது. 14 முதல் 18 வயதுக்குட்பட்ட விடலைப் பருவத்தினரையும் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் வகையில், இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களது குடும்ப பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள் சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குட்பட்வர்களை ஈடுபடுத்தவும், வேறு எந்த பணிகளிலும் அவர்களை அமர்த்துவதை தடுக்கும் வகையிலும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. விவசாயம், கைவினைத் தொழில் போன்றவற்றை மேற்கொண்டு வரும் பெற்றோருக்கு அவர்களது குழந்தைகள் பள்ளி நேரத்திற்கு பிறகோ, விடுமுறை நாட்களிலோ உதவலாம். தங்களது குடும்பம் பாரம்பரிய தொழிலின் அடிப்படைகளை குழந்தைகள் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், அபாயகரமான தொழில்கள் குடும்ப பாரம்பரிய தொழிலாகவே இருந்தாலும், அவற்றில் தங்களது குழந்தைகளை பெற்றோர் ஈடுபடுத்த கூடாது. அபாயம் இல்லாத குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தலாம். டி.வி. தொடர்கள், சினிமா படங்கள், விளம்பர படங்களில் நடிக்க வைக்கலாம். சர்க்கஸ் தவிர்த்த பிற விளையாட்டுகளில் ஈடுபடுத்தவும் தடை இல்லை. ஆனால், அவர்கள் பள்ளிக்கூட நேரமும் முடிந்த பிறகு மட்டுமே இதை செய்ய அனுமதி வழங்கப்படும். குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கினால் அது பிடிவாரண்டு இல்லாமல் கைது செய்யத்தக்க குற்றமாகிறது. குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கினால் விதிக்கப்படுகிற அபராதம் ரூ. 50,000 ஆக உயர்த்தப்படுகிறது வளர் இளம்பருவத்தினருக்கான (அடலசென்ட்) வயது வரம்புக்கு புதிய இலக்கணம் வரையரை செய்யப்படுகிறது. அதனடிப்படையில் 16-18 வயதுக்குட்பட்டவர்கள் அபாயகரமான வேலைகளை செய்ய தடை விதிக்கப்படுகிறது. முதல் முறையாக குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துகிற பெற்றோருக்கு தண்டனை கிடையாது. ஆனால் இரண்டாவது முறையாகவோ, தொடர்ந்தோ ஈடுபடுத்தினால் அதிகபட்ச அபராத அளவு ரூ.10,000 ஆக இருக்கும்.முதல் முறையாக குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அதற்கான குறைந்தபட்ச தண்டனை தற்போதைய அளவான 3 மாதங்களிலிருந்து 6 மாதமாகவும், அதிகப்பட்ச தண்டனை 6 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகளாகவும் உயர்த்ப்படுகின்றது. ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விதிக்கப்பட்டு வருகிற அபராதம் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை உயர்த்தப்படுகிறது. இரண்டாவது முறையாக, குழந்தை தொழிலாளர்களை அமர்த்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை ஜெயில் என்றிருப்பது இனி ஒரு வருடம் முதல் 3 வருட சிறை தண்டனையாக உயர்த்ப்படுகிறது. மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு இரண்டு மாவட்டங்களில் மறுவாழ்வு அளிக்க குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் மறுவாழ்வு நிதியம் உருவாக்கப்படும் என்று கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்