முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

லண்டன்  - இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. அதில் 32 கண்டெய்னர் ரெயில் பெட்டிகள் பொருத்தப்பட்டன.

ஒப்பந்தம்
‘சில்க்ரோடு’ திட்டத்தின் கீழ் வர்த்தகத்தை மேம்படுத்த இங்கிலாந்து - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இரு நாடுகளுக்கு இடையே ரெயில் மூலம் சரக்குகளை எடுத்து சென்று விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் புறப்பட்டது. அதில் 32 கண்டெய்னர் ரெயில் பெட்டிகள் பொருத்தப்பட்டன.

600 மீட்டர் நீளம்
இவை 600 மீட்டர் நீளம் கொண்டவை. அந்த ரெயில் பெட்டிகளில் விஸ்கி, குளிர்பானங்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுகள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த ரெயில் போக்கு வரத்து கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டேன்போர்டு லே- ஹோப் என்ற இடத்தில் இருந்து தொடங்கியது. இது 18 நாட்கள் பயணம் செய்து 12 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தை கடந்து செல்லும்.

வேகமாக ...
பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷியா மற்றும் கஜகஸ்தான் நாடுகள் வழியாக சீனாவை சென்றடையும். முன்னதாக இது கடலில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க ரெயில் பாதையில் பயணம் செய்யும். ரெயில் மூலம் சரக்குகள் ஏற்றுமதி செய்வது விமானத்தில் எடுத்து செல்லப்படும் செலவை விட மிக குறைவாகும். அதே நேரத்தில் கப்பலை விட ரெயில் மூலம் மிக வேகமாக சீனாவை சென்றடைய முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்