பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னை முதல் ஓசூர் வரை குமரிஅனந்தன் நடைபயணம் : மூதறிஞர் ராஜாஜியின் இல்லத்தில் நிறைவடைந்தது

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
hsr

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காந்தி பேரவை சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஆனந்தன் கடந்த மாதம் 11 ஆம் தேதி சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள மூதறிஞர் இராஜாஜி இல்லம் வரை நடைபயணம் வந்தார். இந்த நடைபயணம் இன்று தொரப்பள்ளி மூதறிஞர்ராஜாஜி இல்லத்தில் நிறைவடைந்தது.இவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்:ஏ கோபிநாத் தலைமையில் பேரண்டபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூதறிஞர் ராஜாஜி நுழைவு வாயில் அருகில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கபபட்டது. பின்னர் அங்கிருந்து நடைபயணமாக ராஜாஜி இல்லத்திற்கு வந்தார். அங்கு அவரது திருவுருவ சிலைக்கு குமரிஆனந்தன் மலர்மாலை அணிவித்து நடைபயணத்தை நிறைவு செய்தார்.அப்போது நிருபர்களிடம் பேசுகையில்:மூதறிஞர் இராஜாஜி கடந்த 1917ஆம் ஆண்டு சேலத்தில் நகராட்சித்தலைவராக பதவியில் இருந்தபோது சேலம் நகராட்சி எல்லை பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதற்கான நூற்றாண்டு தற்போது நடைபெறுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்திய நிகழ்வை நினைவு கூறும் வகையில் சென்னையிலிருந்து தொரப்பள்ளி இராஜாஜி இல்லம் வரை வந்து முடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மதுபான கடைகள் 3321 மூடப்பட்ட்ன. இந்த கடைகள் எங்கும் புதியதாக திறக்க கூடாது. அதுப்போல 3002 இன்னும் உள்ளன இந்த கடைகளும் மூடப்பட வேண்டும்.மே 21 ம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ராஜீவ்காந்தி நினைவுநாளில் நெல்லையில் உண்ணா விரதம் தொடங்கப்படும். பின்னர் பொது கூட்டம் தொரப்பள்ளியில் நடந்தது. இந்த கூடடத்தில் அவர் கலநது கொண்டார். காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் ஜேசு துரைராஜ்,பொது குழு கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் நாகராஜ்,விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் சூர்யகணேஷ், ஓசூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் நீலகண்டன், வட்டாரத்தலைவர் ராமமூர்த்தி, கிருஷ்ணகிரி நகர தலைவர் ரகமத்துல்லா,இளைஞர் காங்கிரஸ் கீர்த்திகணேஷ்,பட்டதாரி அணி மாவட்ட தலைவர் ராசய்யா,தொரப்பள்ளி முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் வெங்கடேசப்பா,நாராயணப்பா,ரவிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: