முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலமேட்டில் பங்குனி திருவிழா

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர்&- மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன்&மாரியம்மன் கோவில்களின் பங்குனி பொங்கல் பெருந்திருவிழா நடந்தது. இதில் மாரியம்மனுக்கு சாற்றுதல் விழாவுடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அன்னை பத்திரகாளியம்மனுக்கு சாற்றுதல் விழாவும், பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும் நடந்தது. பின்னர் முளைப்பாரி தண்ணீர், செம்பு ஊர்வலம் எடுத்து வந்து கும்மியடித்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. வாணவேடிக்கையுடன் பத்திரகாளியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கண்திறப்பு விழாவுடன் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.
 இதில் மாவிளக்கு, அக்கினிசட்டி, அலகுகுத்துதல், பால்குடம், முளைபாரி, அங்கபிரதட்சனம், முடிகாணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை பக்தர்கள் செலுத்தினார்கள், மேளதாளங்கள் முழங்க, வர்ணகுடையுடன் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்துசென்று இருப்பிடம் சேர்க்கப்பட்டது. விழாமுடிவில் பத்திரகாளியம்மன்கோவிலில் மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெற்றது. முன்னதாக செண்டைமேளம், கலைநிகழ்ச்சிகள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் அம்மன் திருஉருவம் உள்ளிட்ட சாமிகளின் உருவங்கள் மின்அலங்கார விளக்குகளால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.
 இந்த விழாவையட்டி சுற்று வட்டார கிராமமக்கள் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும், வெளிநாட்டு வாழ் தமிழர்களும், ஏ£ராளமானோர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலிசார் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்