முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டுச் சந்தையில் குவிந்த மகராஷ்டிரா விவசாயிகள்

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      ஈரோடு

ஈரோடு, மாட்டுசந்தையில் மகராஷ்டிரா மாநில விவசாயிகள் குவிந்தனர்.ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வியாழக்கிழமை தோறும் மாட்டுச்சந்தை கூடுகிறது. நேற்றைய சந்தைக்கு, 600 பசுக்கள், 500 எருமைகள், 300 கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. மாடுகள், 18 ஆயிரம் முதல், 32 ஆயிரம் ரூபாய் வரை, எருமைகள், 18 ஆயிரம் முதல், 36 ஆயிரம் வரை, கன்றுகள் தலா, 2,000, முதல், 8,000 வரை விலை போனது.இதுகுறித்து மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது வறட்சியால், அதிக அளவில் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். கேரளாவில் சித்திரை திருநாள் விழா, ‘கனி காணுதல்’ விழாவாக கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும். எனவே, கேரளா வியாபாரிகள் இந்த வாரம் வரவில்லை. ஆனால், மகராஷ்டிரா, தெலுங்கானா மாநில வியாபாரிகள், விவசாயிகள் அதிகம் வந்தனர். இன்னும் ஒரு மாதத்துக்குப்பின், பிற மாநில வியாபாரிகள், விவசாயிகள் அதிகமாக மாடுகளை வாங்க வருவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்