தி.மு.க.வின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்கிறது

சனிக்கிழமை, 15 ஏப்ரல் 2017      அரசியல்
mk stalin(N)

சென்னை  -  தி.மு.க சார்பில் நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என்று, அக்கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வருகிற 16ம் தேதியான நாளை, அனைத்து கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பங்கேற்கும் அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: