முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -துரோகிகளின் எண்ணங்களையும், சூழ்ச்சிகளையும் முறியடித்து விரைவில் நமக்கு சாதகமாக  இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என திண்டுக்கல்லில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதிபட பேசினார்.
 திண்டுக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் மேயருமான வி.மருதராஜ் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக பொருளாளருமான .உதயகுமார், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 நிகழ்ச்சியில் மாநில கழக பொருளாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில்,
 மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா இறந்த நாள் முதல் கட்சி பல்வேறு சோதனைகளை கண்டு வருகிறது. ஆர்.கே.நகா இடைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகள் தாங்களே தேர்தலில் நிற்பது போல் எண்ணி பம்பரமாக சுழன்று வேலை பார்த்தனர். அதிலும் குறிப்பாக திண்டுக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகள் 100க்கு 100 சதவீதம் சிறப்பாக பணிபுரிந்தனர். இதற்காக கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனே பாராட்டினார். 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றிருப்பார். கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை தவிர வேறு யாரும் தேர்தலில் நின்றிருந்தால் இவ்வளவு மகத்தான வெற்றியை பெற்றிருக்க முடியாது. இதனால் தான் தேர்தலை ரத்து செய்து விட்டனர்.
 தற்போது ஒவ்வெரு நாளும் எதிரிகள் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பல ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். கட்சிக்கு சோதனையான இந்நேரத்தில் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணிபுரிய வேண்டு;ம். துரோகிகளின் எண்ணங்களையும், சூழ்ச்சிகளையும் முறியடித்து விரைவில் நமக்கு சாதகமாக  இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்.
 பருவமழை பொய்த்து விட்டதால் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் குடிநீருக்காக மக்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எத்தனை ஆயிரம் கோடி செலவானாலும் பரவாயில்லை. மாநிலத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டுமென முதல்வர் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திணடுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.100 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார் என்று பேசினார்.
 கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.கே.டி.நடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்சா, அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன்,  பேரவை செயலாளர் வி.டி.ராஜன், மாநில அமைப்புசாரா ஓட்டுனரணி துணை செயலாளர் பழக்கடை நாகராஜன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சரவணன், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், அரசு வழக்கறிஞர்கள் மனோகரன், பழனிச்சாமி,  மாவட்ட மகளிரணி செயலாளர் வளர்மதி, ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மற்றும் ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணி, அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், நத்தம் ஒன்றிய செயலாளர் சாஜகான், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமராசு. ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன். நிலக்கோட்டை நிர்வாகிகள் யாகப்பன். தண்டபாணி.  உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்