முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர், 3 முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் விவகாரத்தில் முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி கூறியுள்ளார்.

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில் 3 முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் விவகாரத்தில் முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

சில சமுதாய கொடுமைகள் இருக்குமானால் சம்பந்தப்பட்ட சமுதாயம் விழித்தெழுந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை களைய வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார். 3 முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் விஷயத்தில் முஸ்லீம் சமுதாயத்தில் எந்தவித முரண்பாடும் இருக்கக்கூடாது என்றும் மோடி கேட்டுக்கொண்டார். சமுதாய நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நமது முஸ்லீம் சகோதரிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களுக்கிடையே சமுதாய அநீதி விளைவிக்கக்கூடாது. யாரும் பாதிப்புக்குள்ளாகக்கூடாது. 3 முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் விவகாரத்தில் முஸ்லீம் சமுதாயத்திற்குள் எந்தவித முரண்பாடோ கருத்து வேறுபாடோ இருக்கக்கூடாது. எந்த சமுதாயத்திலும் சமுதாய  கொடுமைகள் எதுவும் இருந்தால் அந்த சமுதாயத்தை விழிப்படையச் செய்து அந்த கொடுமைகளை களையச் செய்யும்படி செய்வதே நமது வேலையாகும். அதைத்தான் நாம் செய்துகொண்டியிருக்கிறோம். இதுதான் என்னுடைய நோக்கமாகும் என்றும் பிரதமர் மோடி மேலும் கூறினார்.
கூட்டத்தில் பிரதமர் மோடி  பேசியதை மத்திய அமைச்சர் நிதின்கட்காரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்