முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் ஜெர்மன் செப்பர்டு நாய்கள் கண்காட்சி 162 நாய்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் நேற்று நடைபெற்ற ஜெர்மன் செப்பர்டு நாய்களுக்கான கண்காட்சியில் 162 நாய்கள் பங்கேற்றன.

                                        4_வது ஆண்டு

கோடை சீசனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஊட்டியில் நாய்கள் கண்காட்சி நடத்தப்படும். ஆனால் ஜெர்மன் செப்பர்டு ரக நாய்கள் மட்டுமே பங்குபெறும் நாய்கள் கண்காட்சி 4_வது ஆண்டாக நேற்று நடத்தப்பட்டது. ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில்  பஞ்சாப், டெல்லி, மேற்குவங்காளம், குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் என மொத்தம் 162 நாய்கள் கலந்து கொண்டன.

                                    ஜெர்மன் நடுவர்

இக்கண்காட்சியில் நாய்களின் மோப்பத்தன்மை, வளர்ச்சி விகிதம், பாரம்பரியம், நடை, ஓட்டம், அதன் அளவு உள்ளிட்டவைகள் கணக்கிடப்பட்டு அதற்குத்தகுந்தவாறு சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏ முதல் ஜெ வரை 10 பிரிவுகளில் கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சிக்கு நடுவராக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த

ஹெல்மெட் குயினிக்  கலந்து கொண்டு சிறந்த நாய்களை தேர்வு செய்தார்.

இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஜெர்மன் செப்பர்டு நாய் வளர்ப்போர் குழுமத்தின் தலைவர் எஸ்.டி.லஜபதி, செயலாளர் ல.விவேக், பொருளாளர் ரகு, துணைத்தலைவர் கர்னல் ஜோசி ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்