முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பெண்ணுக்கு சர்வதேச விருது

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர்  - இந்திய பெண் பொறியாளர் (சுற்றுச்சூழல்) இந்த ஆண்டுக் கான ‘கார்டியர் விமன்ஸ் இனிஷியேட்டிவ் விருதை’ வென்றுள்ளார்.  பெண் தொழில்முனை வோரை ஊக்குவிக்கும் வகை யில் 2006-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு இந்தியாவின் திருப்தி ஜெயின் (46) உட்பட 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டன. இந்த விருதுடன் தலா ரூ.66 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது.  இந்திய அரசில் (ஊரக வளர்ச்சி) சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றிய ஜெயின், குஜராத்தை தலைமையகமாகக் கொண்டு, 2013-ல் நைரீதா சர்வீஸஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன்மூலம் நீர் மேலாண்மை கருவிகளை சிறு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். இது மழை நீரை சேகரித்து பயன்படுத்த உதவுவ தால் வறட்சியை சமாளிக்க உதவுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்