ரூ.83 லட்சத்தில் செஞ்சி காவல் நிலையத்திற்கு புதி்ய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      விழுப்புரம்
senji

ரூ.83.67 லட்சம் திட்ட மதிப்பீட்டிலான செஞ்சி நகர காவல் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள் அன்று நடைபெற்றது.செஞ்சியில் தற்போது இயங்கி வரும் காவல் நிலையம் செஞ்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய ஆங்கிலேயர் கால கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த இடம் போதிய வசதிகள் இல்லாததால், புதிய கட்டடம் கட்ட தமிழ்நாடு அரசு காவல் துறை வீட்டு வசதி கழகம் சார்பில் ரூ 83.67 லட்சம் திட்ட மதிப்பீட்டில் செஞ்சி நகர காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வளாகத்தில் செஞ்சி டிஎஸ்பி.ரவிச்சந்திரன் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்சசியில் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் அப்பாண்டைராஜ், போக்குவரத்து உதவி ஆய்வாளர் முத்துகுமார், சப் இன்ஸ்பெக்டர் அசோகன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், மதிப்பியல் தலைவர் மொய்தீன்பாஷா, செயலர் வெங்கட், கெளரவதலைவர் ராஜகோபால், பீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


 

இதை ஷேர் செய்திடுங்கள்: