முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நேற்று நடைபெற்ற இந்த குறைதீர்வு கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை , முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 668 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் வழங்கி மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தின்போது மாற்றுத்திறனாளிகள நலத்துறையின் சாரபில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளையும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோளினையும் மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலியும் வழங்கினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்