முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம் : பாராளுமன்ற குழு சிபாரிசு நடைமுறைக்கு வந்தது

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் இந்தியில் பேச வேண்டும் என்றும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம் என்றும் பாராளுமன்ற குழு சிபாரிசு செய்தது தற்போது நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அறிக்கை தாக்கல்
மத்தியில் நடந்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தி மொழி பயன்பாடு தொடர்பாக ப.சிதம்பரம் தலைமையில் பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது சிபாரிசை கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அதில் ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்தியிலேயே உரையாற்ற வேண்டும், பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம் என்றும் சிபாரிசு செய்து இருந்தது.

ஜனாதிபதி ஒப்புதல்
இந்த சிபாரிசு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போது ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து உடனடியாக இந்த சிபாரிசு அமலுக்கு வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தி பேசும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் செயல்பாடுகள், ஆவணங்கள், அறிவிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது.

முதலாவது மொழியாக ...
இனி மத்திய அரசின் பெரும்பாலான அறிவிக்கைகள், செயல்பாடுகள், அமைச்சர்களின் உரைகள் இந்தியிலேயே இருக்கும். தேவைப்பட்டால் மட்டும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்படும். ஏர் இந்தியா நிறுவனம் நடத்தும் உள்நாட்டு விமான போக்குவரத்தான இந்தியன் ஏர்லைன்ஸ் டிக்கெட்டுகளில் ஆங்கிலம் தவிர இந்தியும் இடம் பெற்று இருக்கும். ரெயில்வே, விமான நிறுவனங்களில் இந்தி முதலாவது மொழியாகவும், தொடர்ந்து ஆங்கிலமும் பயன்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்