நூக்காம்பாடி கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் 58 பயனாளிகளுக்கு ரூ. 17.93 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வழங்கினார்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
photo04

திருவண்ணாமலை வட்டம் நூக்காம்பாடி கிராமத்தில் நேற்று நடந்த மனுநீதிநாள் முகாமில் 58 பயனாளிகளுக்கு ரூ. 17.93 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜி.சுப்பிரமணி வழங்கினார். திருவண்ணாமலை வட்டம் நூக்காம்பாடி கிராமத்தில் ராந்தம், நம்மியந்தல், நூக்காம்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கான மனுநீதிநாள் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஜி.சுப்பிரமணி தலைமை தாங்கினார் தாசில்தார் ஆர்.ரவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்க, மண்டல துணை தாசில்தார் திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார் இந்தமுகாமில் மொத்தம் 115 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 58 மனுக்கள் ஏற்கப்பட்டன. 19 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது முகாமில் பட்டா மாறுதல் 4 பேருக்கும் புதிய குடும்ப அட்டை 24 பேருக்கும் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை 17 பேருக்கும், குடும்ப அட்டையில் பெயர் நீக்கல் சேர்த்தல் 13 பேருக்கும் மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூ. 17 லட்சத்து 93 ஆயிரத்து 760 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் உதவி வேளாண் அலுவலர் சுப்பிரமணியன், தோட்டக்கலைத்துறை உதவி வேளாண் அலுவலர் சுந்தர்ராஜன், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ஏ.பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர்கள் அன்பழகன், ஜி.சிவா, பரசுராமன், காமேஷ்குமார், திருமால், மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் கௌரி நன்றி கூறினார்.

 


 

இதை ஷேர் செய்திடுங்கள்: