பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கர்ப்பம் !

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      விளையாட்டு
serena pregnant1(N)

வாஷிங்டன்  - பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தான் கர்ப்பமாக இருப்பதை அவரே உறுதிசெய்து உள்ளார்.

டென்னிஸ் நட்சத்திரம்
அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் 35 வயது செரீனா வில்லியம்ஸ் தன்னுடைய ஸ்னாப்ஷாட்டில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் புகைப்படத்தின் கேப்ஷனாக 20 வாரங்கள் என குறிப்பிட்டு இருந்தார். இதனை உடனடியாக நீக்கிவிட்டார். நீச்சல் உடையில் அவர் கர்ப்பமாக இருக்கும் காட்சி அடங்கிய புகைப்படமானது சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது, செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாகதான் உள்ளார் என்பதையும் அவருடைய பிரதிநிதி உறுதிசெய்து உள்ளார்.

20 வாரம் கர்ப்பம்
செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். இப்போது செரீனா 20 வாரம் கர்ப்பம் என பதிவிட்டு உள்ளதால் அவர் ஜனவரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடிய போதே கர்ப்பமாக இருந்தார் என உலக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியுடன் தங்களுடைய சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். செரீனா வில்லியம் குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


2-வது இன்னிங்ஸ்
செரீனா வில்லியம்ஸ் தனது வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்க இருக்கிறார் என கடந்த டிசம்பரில் செய்திகள் வெளியாகியது. அப்போது அவரும், அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. 33 வயதான அலெக்சிஸ், ரெட்டிட் இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவர். இருவரின் முதல் சந்திப்பு ரோம் நகரில் நடந்தது. அப்போது அலெக்சிஸ், செரீனாவிடம் காதலை வெளிப்படுத்தி உள்ளார். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் தங்களது காதலை வெளி உலகுக்கு தெரியப்படுத்தாமல் ரகசியம் காத்து வந்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிபிட்ட செரீனா இப்போது கர்ப்பமாக உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.

முன்னாள் வீரர்கள்
டென்னிஸ் வீராங்கனைகள் குழந்தை பெற்றுக் கொண்ட பின்னரும் டென்னிஸ் போட்டிகளில் அசத்தி வருகிறார்கள், உதாரணமாக டென்னிஸில் அதிரடியாக உயர்வை எட்டிய பெலாரஸ் நாட்டை சேர்ந்த வீராங்கனை விடோரியா அசரன்ங்கா (செரீனா வில்லியம்ஸைவிட 8 வயது குறைந்தவர்) தன்னுடைய முதல் குழந்தையை டிசம்பர் மாதம் பெற்றுக் கொண்டார், மார்ச் மாதம் மீண்டும் டென்னிஸ் பயிற்சியை தொடங்கிவிட்டார், சான்பிரான்ஸிகோவில் ஜூலை இறுதியில் நடைபெற உள்ள ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துக் கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: