எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. மிளகாயின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் (விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த உணவு சூட்டைக் கிளப்புமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல கேள்விகள். எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை. பச்சை மிளகாய், செத்தல் மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. செத்தல் மிளகாயில் கலோரியும், விட்டமின் யு சத்தும் மற்றதைவிட சற்றே அதிகம்.
கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை. எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும் கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் யு சத்தானது அதிகம். அதனால், விழித்திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது. Capsaicin என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும்.
விட்டமின் ஊ சத்தும் அதிகம். அதனால் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்படுகிறது. நரம்புப் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
மிளகாயில் உள்ள Capsaicin பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது. அப்படி தண்டுவடத்துக்கு வலி இடம் பெயர்ந்தால், அது மூளையில் உணரப்படும். அடிபட்டவர்களுக்கும், வெட்டுக்காயம் பட்டவர்களுக்கும் காரமான உணவு கொடுக்கச் சொல்வதன் பின்ணணி இதுதான்.
மிளகாய் எடுத்துக் கொள்வதால், என்டார்ஃபின் எனப்படுகிற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. அதனால் ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கிறது. இரவு காரசாரமான உணவு எடுத்துக் கொண்டால், காலையில் மிகவும் ஓய்வாக எழுந்ததாக உணர்வது இதனால்தான். தவிர மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப் படுத்தி, உடலை லேசாக்கி விடும்.
இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்சனை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, மூலநோய் போன்றவை வரலாம். மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம், ஊறுகாய் போன்றவற்றை நம் முன்னோர் சேர்த்துப் பாவித்தார்கள்.
வயிற்றுப்புண் இருப்பவர்களும், அமிலச் சுரப்பு பிரச்னை உள்ளவர்களும் மிளகாயை எடுத்துக் கொண்டால் பிரச்சனை தீவிரமடையும். குடைமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம். அது புற்றுநோய்க்கு எதிராக போராடக் கூடியது என்பது உண்மை. ஆனாலும், அதையும் பச்சையாகவோ, அதிகமாகவோ எடுக்க வேண்டாம். வயிற்றுப்புண் இருப்பவர்களும், அமிலச் சுரப்பு பிரச்னை உள்ளவர்களும் மிளகாயை எடுத்துக் கொண்டால் பிரச்சனை தீவிரமடையும். குடைமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம். அது புற்றுநோய்க்கு எதிராக போராடக் கூடியது என்பது உண்மை. ஆனாலும், அதையும் பச்சையாகவோ, அதிகமாகவோ எடுக்க வேண்டாம்.
ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்கள் பச்சை மிளகாயை உண்ண வேண்டும். பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது. மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி மில்லியளவு குடித்துவரவாந்தி- பேதி நிற்கும்.
மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி வேளை குடிக்க மார்பு நோய் வயிற்று நோய் செரியாமை கழிச்சல் காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும். மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.
மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி வீக்கங்களுக்குப் பூச குணமாகும். மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட தொண்டைக் கம்மல் குணமாகும்.
மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும். மிளகாய் பெருங்காயம் கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.
மிளகாய் செடி சமூலத்தை கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும் சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
எஸ்.பாலமுருகன்
சிவகங்கை
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்