முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘எச்-1 பி’ விசா விவகாரம்: அமெரிக்க வர்த்தகதுறை அமைச்சரிடம் அருண்ஜெட்லி பேச்சு

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவின் நடவடிக்கையினால் இந்தியா பாதிப்பை எதிர்க்கொண்டு உள்ள ‘எச்-1 பி’ விசா விவகாரம் தொடர்பாக அந்நாட்டு வர்த்தகதுறை அமைச்சரிடம் அருண் ஜெட்லி பேச்சுவார்ச்சை நடத்தியுள்ளார்.

புதிய கட்டுப்பாடு
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த ‘எச்-1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். இந்த ‘எச்-1 பி’ விசாக்களை வழங்குவதில் சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வருகிறது.

இந்திய நிறுவனங்கள்
இந்தியா உள்பட அமெரிக்காவில் அலுவலகங்கள் வைத்துள்ள பல நாடுகளும் சிக்கலை சந்தித்துள்ளன. தங்களது பணியாளர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை ஒட்டுமொத்த நீக்கினால் வர்த்தக இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் அந்த நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் ஐ.டி, நிறுவனங்கள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டு உள்ளன. நாஸ்காம், அசோசேம் ஆகிய அமைப்புகளும் இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளன.

ஜெட்லி பயணம்
அமெரிக்காவில் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றின் கூட்டமும், ஜி-20 நாடுகள் அமைப்பின் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்காவுக்கு 5 நாள் பயணமாக சென்று உள்ளார். 

முறையீடு
அப்போது  இந்த பிரச்னையில் இந்திய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு சலுகை காட்டும்படி, மத்திய நிதி அமைச்சர்அருண் ஜெட்லி அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்புர் ரோஸிடம் முறையிட்டு உள்ளார். அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சி அமைந்த பின்னர் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான முதல் அமைச்சர்கள் கூட்டம் இதுவாகும். இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் திறன்வாய்ந்த ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் அருண் ஜெட்லி தெளிவாக எடுத்துரைத்து உள்ளார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னுரிமை வழங்க ...
டொனால்டு டிரம்ப் அரசானது விசா நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது என்றும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என வில்புல் கூறிஉள்ளதாக நம்பப்படுகிறது என தகவல்கள் தெரிவித்து உள்ளன. அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகமானது அதி திறன்வாய்ந்தவர்களுக்கு விசா வழங்குவதில் முன்னுரிமை வழங்க தகுதியின் அடிப்படையிலான விசா கொள்கையை முன்னெடுக்கிறது என அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் கூறிஉள்ளார் என தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்