முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை : பொதுமக்களும் மகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

மதுரை  - கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போன நிலையில், கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சூளகிரி, பாகலூர், செட்டிபள்ளி, சின்னாறு, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால், வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. குன்னூர், உதகை, கோத்தகிரி போன்ற பகுதிகளில் பெய்த மழையால் நீர்தேக்க பகுதிகளில், நீர்மட்டம் கனிசமாக உயர்ந்துள்ளது. மலை தோட்ட காய்கறிகளை பயிர் செய்ய இம்மழை ஏதுவாக அமைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதனிடையே, தேனி மாவட்டம் கம்பம் அருகே, இடி தாக்கியதில் விவசாயிக்கு சொந்தமான 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்