முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் 140 ராணுவ வீரர்கள் பலி

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

மசார்-ஐ-ஷரீப்  - ஆப்கனில் மசார்-ஐ-ஷரீப் நகரத்திலுள்ள மசூதியில் ராணுவத்தினர் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 140 ராணுவ வீரர்கள் பலியானதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஆப்கன் செய்தித் தொடர்பாளர் கூறியபோது, "ஆப்கனில் நேற்று மாலை மசார்-ஐ-ஹரீப் நகரிலுள்ள மசூதி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது ராணுவ உடையில் வந்த 10 தாலிபன் தீவிரவாதிகள் துப்பாக்கிகளைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 140 ராணுவ வீரகள் பலியாகியுள்ளனர். மேலும் தாக்குதலில் காயமடைந்த பலர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது" என்றார்.

ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 10 தாலிபன் தீவிரவாதிகளில் 7 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதகாவும், 2 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும். ஒருவர் ஆப்கன் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.  ஆப்கனில் ராணுவத்தினர் மீது தாலிபன்கள் சமீபத்தில் நடத்திய மிக பெரிய தாக்குதலாக இத்தாக்குதல் பார்க்கப்படுகிறது.

மோடி கண்டனம்
ஆப்கனில் ராணுவ வீரர்கள் மீது தாலிபன்கள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி கூறும்போது, "ஆப்கன் ராணுவ வீரர்கள் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இந்தியாவின் பிரார்த்தனைகள் உடனிருக்கும்" என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்