முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டம் மோர்தானா அணையிலிருந்து பொதுமக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர்: அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமான உள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டம் மோர்தானா அணையிலிருந்து பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்காக தண்ணீரை வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தண்ணீர் திறப்பு

மோர்தானா அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கவுண்டன்ய நதி ஆற்றிலும், இடதுபுறக்கால்வாயிலும் மற்றும் வலதுபுறக்கால்வாயிலும் (செருவங்கி ஏரிவரை) அம்மணாங்குப்பம், வேப்பூர், நெட்டேரி, கீழ்ஆலத்தூர், பசுமாத்தூர் பெரிய ஏரி, பசுமாத்தூர் சித்தேரி, காவனூர் ஏரி, அக்ரஹாரம், பெரும்பாடி, எர்த்தாங்கல் மற்றும் செருவங்கி ஆகிய 11 ஏரிகளுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 240 கனஅடி வீதம் (கவுண்டன்யா ஆற்றில் வினாடிக்கு 100 கனஅடி விதமும், இடது புறக்கால்வாயில் வினாடிக்கு 70 கனஅடி வீதமும் மற்றும் வலதுபுறக்கால்வாயில் வினாடிக்கு 70 கனஅடி வீதமும்) 22.04.2017 இன்று காலை8.00 மணி முதல் 29.04.2017 அன்று காலை 8.00 மணி வரை 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் குடியாத்தம் வட்டம் சீவூர், செதுக்கரை, அம்மணாங்குப்பம், வேப்பூர், பசுமாத்தூர், காவனூர், அக்ரஹாரம், பெரும்பாடி, எர்த்தாங்கல், நெல்லூர்பேட்டை, தாழையாத்தம், செருவங்கி ஆகிய கிராமங்கள், காட்பாடி வட்டம் மேலூர், கீழுர், கொத்தமங்கலம், வடவிரிஞ்சிபுரம், உண்ணாமலை சமுத்திரம், சோழமூர், தலையாரம்பட்டு, தண்டல கிருஷ்ணாபுரம், வஞ்சூர், விருதம்பட்டு, கழிஞ்சூர் ஆகிய கிராமங்கள், பேர்ணாம்பட்டு வட்டம் செட்டிகுப்பம், மேல்முட்டுகூர், மேல்ஆலத்தூர், கூடநகரம், பட்டு, ஓலக்காசி, சித்தாத்தூர் என ஆக மொத்தம் 30 கிராமங்களிலும், குடியாத்தம் நகரிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 6534 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி மற்றும் குடிநீர்

வசதி பெறும். மேலும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்திப் பயனடையுமாறு வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சி.அ.ராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஜி.பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், ஆர்.பாலசுப்பிரமணி, ஜி.லோகநான், பொதுபணித்துறை நீர்வள ஆதார மேற்பார்வை பொறியாளர் ராமகிருஷ்ணன், செயற்பொறியாளர் அன்பரசன், பள்ளி கல்வித்குழுத் தலைவர் வி.ராமு, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் பத்மநாபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்