முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணியில் 33 கோடி மதிப்பிலான ஆர்க்காடு பாலாற்று குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்த அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

ஆரணியில் செயல்பட்டு வரும் ரூ.33 கோடி மதிப்பிலான ஆர்க்காடு பாலாற்று குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

   அமைச்சர் ஆய்வு

ஆர்க்காட்டிலிருந்து ஆரணிக்கு ரூ.33 கோடி மதிப்பில் பாலாற்று குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கிவிட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு சில தினங்களில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செயல்படுத்த ஆரணி நகராட்சியில் பகுதியில் உள்ள தரைதள கிணறு, குடிநீர் விநியோகம் செய்யும் அறைகள், குடிநீர் மேநீர் தேக்கத்தொட்டி, பைப்புகள் அமைத்துக்கொண்டிருக்கும் பகுதிகள் ஆகிய இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்து உடனடியாக பணியை முடிக்க உத்தரவிட்டார்.

உடன் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் என்.சேகர், நகராட்சி ஆணையாளர் கமலக்குமாரி, பொறியாளர் இரவி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் வேல்முருகன், நற்குணம், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் க.சங்கர், பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்