திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      காஞ்சிபுரம்

 

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

குறைகள்

 இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 67 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 46 மனுக்களும், ஆதிதிராவிடர் இ பிற்படுத்தப்பட்டோர் நலம் தொடர்பாக 3 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 25 மனுக்களும், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக 12 மனுக்களும், ஊரக இ நகர்புற வளர்ச்சி தொடர்பாக 10 மனுக்களும், கடனுதவி கேட்டு 3 மனுக்களும், அடிப்படை வசதியான போக்குவரத்து இ சுகாதாரம் தொடர்பாக 5 மனுக்களும், வேளாண்மை, கால்நடைத்துறை இ மீன்வளம் தொடர்பாக 17 மனுக்களும், கல்வி தொடர்பாக 5 மனுக்களும், பேரிடர்கள் தொடர்பாக 4 மனுக்களும், சான்றிதழ் வேண்டி 12 மனுக்களும், இதர துறையாக 59 மனுக்களும், என மொத்தம் 268 பொது மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

 இம்மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளவும், பயனாளிகளுக்கு உதவிடும் வகையில் விரைந்து பரிசீலிக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக 12 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்தோறும் ரூ.1000ஃ- பெரும் உதவித்தொகை ஆணையினையும் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வி.முத்துசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சு.சிவகாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: